சினிமா

பாயும் ஒளி நீ எனக்கு! விக்ரம் பிரபுக்கு ஜோடியாகும் பிரபல சீரியல் நடிகை! வெளியான தகவலால் செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Summary:

தெய்வமகள் சீரியல் நடிகை வாணி போஜன் விக்ரம் பிரபுவுடன் இணைந்து பாயும் ஒளி நீ எனக்கு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற தெய்வமகள் என்ற தொடரில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் வாணி போஜன்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தாவிய அவர் ஓர் இரவு, ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து வாணி போஜன் விக்ரம் பிரபுவுடன் இணைந்து புதிய படத்தில் நடித்துள்ளார். 

மகாலட்சுமி ஆர்ட்ஸ் குமாரசுவாமி பத்திக் கொண்டா பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் சௌத்ரி இயக்குகிறார். பாயும் ஒளி நீ எனக்கு என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் வில்லனாக கன்னட நடிகர் தனன்ஜெயா நடிக்கிறார்.
பரியேறும் பெருமாள் படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர்  இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மேலும் இப்படத்தின் மூலம் மணி ஷர்மாவின் மகன் மஹதி ஸ்வர சாகர் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். மேலும் பாயும் ஒளி நீ எனக்கு படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Advertisement