சினிமா

கண்ணதாசனின் பேரனுக்கு ஜோடியாகும் பிரபல சீரியல் நடிகை! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

Summary:

Vani bhojan act as pair to kannadasan grandson

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெருமளவில் பிரபலமான, தெய்வமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் வாணிபோஜன். அதனைத் தொடர்ந்து அவர் லட்சுமி வந்தாச்சு என்ற சீரியலிலும் நடித்துள்ளார். பின்னர் வெள்ளித்திரைக்கு தாவிய அவர் முதன்முதலாக அசோக்செல்வன் ஹீரோவாக நடித்த ஓ மை கடவுளே என்ற படத்தில் நாயகியாக நடித்தார். 

 பின்னர் வைபவ், வெங்கட்பிரபு நடிப்பில் உருவாகி வரும் லாக்கப் படத்திலும் அவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.  அதனை தொடர்ந்து அவர் தற்போது விக்ரம் பிரபுக்கு ஜோடியாக ஒரு படத்திலும், சூர்யா தயாரிக்கும் 2 படங்களையும் தனது கைவசம் வைத்துள்ளார்.


இந்நிலையில், வாணி போஜன்  தற்போது தாழ் திறவா எனும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் வாணி போஜன்  கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசனுக்கு ஜோடியாக நடிக்கிறார். 
இப்படத்தை பர்மன் பிக்சர்ஸ் தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் பரணி சேகரன் இயக்குகிறார். மேலும்  இப்படத்தில் சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.

 

 

 

 


Advertisement