இன்று மாலை அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் உச்சகட்ட விருந்து.! பெரும் எதிர்பார்ப்பில் தல ரசிகர்கள்.!

இன்று மாலை அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் உச்சகட்ட விருந்து.! பெரும் எதிர்பார்ப்பில் தல ரசிகர்கள்.!


valimai making video expecting today evening

போனிகபூர் தயாரிப்பில், வினோத் இணையத்தில் தல அஜித் நடித்துவரும் திரைப்படம் வலிமை. இப்படத்தின் வேலைகள் ஆரம்பித்து பல மாதங்கள் ஆகியும், படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் இல்லை என அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வந்தனர்.

இதனையடுத்து படக்குழு சில போஸ்டர்களை வெளியிட்டு இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவை கொண்டுவந்தது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்  மற்றும் வேற மாறி பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. வலிமை படம் வரும் 2022 பொங்கல் பண்டிகையன்று தியேட்டர்களில் வெளியாகிறது.

இந்நிலையில் வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ இன்று மாலை வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது . ‘வலிமை’ ஸ்டண்ட் மேக்கிங் வீடியோ எந்தவித முன்னறிவிப்புமின்றி இன்று மாலை டுவிட்டர் உள்ளிட்ட இணையதளங்களில் வெளியாகும் என்று கூறப்படுவதால் அஜித் ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.