த்ரிஷா புடவையில் விஜயின் கட்சி கொடி.. பிரபல தயாரிப்பாளர் சரமாரி கேள்வி?
அந்த விஷயத்திற்காக பெரும் தொகையை கவிஞர் வாலிக்கு கொடுத்த வெங்கட் பிரபு.. காரணம் தெரிந்தால் ஷாக்காகிடுவீங்க.?
வாலிபக் கவிஞரான கவிஞர் வாலி தமிழ் சினிமாதுறையில் மிகவும் பிரபலமானவர். இவர் நடிகர், எழுத்தாளர், கவிஞர் என பன்முக திறமைகளை கொண்டவர். தமிழ் திரை உலகில் வாலி மூன்று தலைமுறைக்கும் மேலாக பாடல்களை எழுதியவர் தன் வாழ்நாளில் 15000 மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் ஆகிய இரண்டு புகழ்பெற்ற நடிகர்கள் உச்சத்தில் இருந்தபோது அவர்கள் நடித்த படங்களுக்கு பெரும்பாலான பாடல்கள் எழுதிய பெருமைக்குரியவர். அந்த காலத்தில் கண்ணதாசனுக்கு இணையாக பேசப்பட்டு வந்தார். 2007 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான 'பத்மஸ்ரீ விருது' பெற்றவர்.
இவர் நடித்த ஹேராம், சத்யா என்ற படங்கள் மாபெரும் வெற்றியடைந்தன. இளையராஜாவிற்கு படங்களில் இசை அமைப்பதற்கு வாய்ப்பு பெற்று தந்ததும் இவரே. இவர் எழுதிய சுயசரிதை புத்தகம் பிரபலமானதாகும்.
இதுபோன்ற நிலையில், இவரின் பேட்டி ஒன்றில் வெங்கட்பிரபு இயக்கிய 'சென்னை 28' படத்திற்கு இவர்தான் பெயர் வைத்ததாக கூறியிருந்தார். மேலும் அந்த படத்திற்காக வெங்கட் பிரபுவிடம் பெருந்தொகை ஒன்றை சம்பளமாக பெற்றிருந்ததாக கூறியிருந்தார். அது தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.