சினிமா

பாதியிலேயே இப்படி ஆகிருதே! செம வருத்தத்தில் சரண்யா வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் ஆறுதல்!!

Summary:

பாதியிலேயே இப்படி ஆகிருதே! செம வருத்தத்தில் சரண்யா வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் ஆறுதல்!!

பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபலமானவர் சரண்யா. அதனைத் தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் நெஞ்சிருக்கும் வரை என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து மக்கள் மத்தியில் நன்கு ரீச்சானார். அதைத் தொடர்ந்து அவர் சன் டிவியில் ஒளிபரப்பான ரன் தொடரில் நடித்தார்.

ஆனால் சில காரணங்களால் அந்த தொடரிலிருந்து சரண்யா பாதியிலேயே விலகினார். பின்னர் அவர் விஜய் டிவியில் ஆயுத எழுத்து என்ற தொடரில் நடித்தார். ஆனால் அந்த தொடரும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அவர் மீண்டும் வைதேகி காத்திருந்தாள் என்ற தொடரில் ஹீரோயினாக  ரீஎன்ட்ரீ கொடுத்தார்.

50 எபிசோடுகளை கடந்த இந்த சீரியல் சமீபத்தில் திடீரென்று நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மிகவும் வருத்தத்துடன் சரண்யா தனது இன்ஸ்டாகிராமில், இந்த கஷ்டமான நேரத்தில் அமைதியாக இருக்க விரும்புகிறேன். கடினமான காலத்தில் எனக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு நன்றி.

உழைப்பை உதாசீனப்படுத்தும் போதுதான் மிகவும் வலிக்கிறது. ஆனால் என்னை உடைக்க முடியாது. கூடுதல் பலத்துடன் விரைவில் மீண்டு வருவேன் என கூறியுள்ளார். இந்நிலையில் இவரது பதிவிற்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

 


    


Advertisement