போ புயலே போய்விடு.! ஏழையரின் பெருமூச்சை விடவா நீ.. பெருவீச்சு வீசுவாய்? கவிஞர் வைரமுத்து

போ புயலே போய்விடு.! ஏழையரின் பெருமூச்சை விடவா நீ.. பெருவீச்சு வீசுவாய்? கவிஞர் வைரமுத்து


vairamuthu-talk-about-nivar


வங்கக் கடலில் உருவான நிவர் புயல் வலுப்பெற்று நாளை அதிதீவிர புயலாக புதுச்சேரி அருகே கரையைக் கடக்க உள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியில் பல இடங்களிலும் நேற்று காலையில் இருந்து தொடர்மழை பெய்து வருகிறது. 

நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலானது இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் மாமல்லப்புரத்திற்கும் பாண்டிச்சேரிக்கும் இடையே கரையைக் கடக்கிறது என்பதால், வங்கக்கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 


இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், புயல் குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துளார். அதில், " போ புயலே.. போய்விடு.... பச்சைமரம் பெயர்த்துப்   பல் துலக்காமல்..  வேய்ந்தவை பிரித்து விசிறிக் கொள்ளாமல் குழந்தையர் கவர்ந்து.. கோலியாடாமல் ..பாமர உடல்களைப் பட்டம் விடாமல்.. சுகமாய்க் கடந்துவிடு.. சுவாசமாகி விடு... ஏழையரின்
பெருமூச்சை விடவா நீ.. பெருவீச்சு வீசுவாய்? என பதிவிட்டுள்ளார்