விதவையான கேமரா கேவிக்கேவி அழுகிறது நண்பா..! கேவி ஆனந்த் மறைவிற்கு வைரமுத்துவின் புகழஞ்சலி.!

விதவையான கேமரா கேவிக்கேவி அழுகிறது நண்பா..! கேவி ஆனந்த் மறைவிற்கு வைரமுத்துவின் புகழஞ்சலி.!


vairamuthu talk about kv anand

அயன், மாற்றான், கவண், காப்பான், கோ, அநேகன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் கே.வி. ஆனந்த். மாரடைப்பு ஏற்பட்டு இன்று அதிகாலை 3 மணி அளவில் காலமானார். அவரது திடீர் மறைவு தமிழ் திரையுலகினரையும், ரசிகர்களையும் கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இயக்குனர் கே.வி. ஆனந்த் மறைவிற்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ''வருந்துகிறேன் நண்பா!.. திரையில் ஒளிகொண்டு சிலை செதுக்கினாய்!.. வாஜி வாஜி பாடலை ராஜ கவிதையாய் வடித்தெடுத்தாய்!

என் எத்தனையோ பாடல்களை ரத்தினமாய் மாற்றினாய்!, இதோ உனக்கான இரங்கல்பாட்டை எங்ஙனம் படம் செய்வாய்?., விதவையான கேமரா கேவிக்கேவி அழுகிறது கே.வி.ஆனந்த்!
ஒளியாய் வாழ்வாய் இனி நீ.'' இவ்வாறு வைரமுத்து புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.