
உடல்நலக்குறைவு காரணமாக கவிஞர் வைரமுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து இன்று காலை திடீரேன சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய நோய் பிரச்சனைக்காக உள்நோயாளியாக வைரமுத்து அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், வைரமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து அவரது உதவியாளர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், வைரமுத்து வழக்கமான பரிசோதனைக்காக தான் மருத்துவமனை சென்றதாக அவர் கூறினார். அவர் நலமுடன் இருப்பதாகவும் கூறினார்.
வைரமுத்துக்கு ஏற்கனவே இதய சம்பந்தமான நோய் இருந்ததால், தற்போது அவர் அதே பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்கும் குரல் கொடுத்து வரும் வைரமுத்து, டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement