லியோ திரைப்படத்தில் இணையும் முக்கிய பிரபலம்.. யாரென்று தெரிந்து அதிர்ச்சியான விஜய் ரசிகர்கள்.?
திடீர் உடல்நலக்குறைவால் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட கவிஞர் வைரமுத்து, இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.!
திடீர் உடல்நலக்குறைவால் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட கவிஞர் வைரமுத்து, இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.!

கவிஞர் வைரமுத்து திடீர் உடல்நலக்குறைவால் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உணவு ஒவ்வாமை காரணமாக திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட அவர் ஐ.சி.யு.பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் இருக்கிறார்.
கடந்த ஒரு சில வாரங்களாக கவிஞர் வைரமுத்து மீது பெண் பத்திரிக்கையாள,ர் பாடகி சின்மயி என தொடர்ந்து பல பெண்கள் பாலியல் புகார் கூறிவந்தனர்.
இந்த நிலையில், பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த அவர், மனநிம்மதிக்காக சென்னையை விட்டு மதுரை, பசுமலை வளர்நகரிலுள்ள தனது நெருங்கிய நண்பர் வீட்டுக்குச் சென்று தங்கியிருந்தார்.
இந்நிலையில் இன்று மதிய உணவு சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடுக்க சென்ற கவிஞர் சிறிது நேரத்திலேயே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபட்டார் .
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வைரமுத்துவுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டிருக்கிறது என்று கூறி ஐ.சி.யு.வில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.