சினிமா

நடிகர் வைபவின் அழகான மனைவி மற்றும் மகளை பார்த்திருக்கீங்களா.! இதோ.

Summary:

vaipov family photo

நடிகர் வைபவ் ரெட்டி,தமிழில் “சரோஜா, மங்காத்தா” போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். இவர், இயக்குனர் ஏ. கோதண்டராமி ரெட்டியின் மகன் ஆவார். இவர் தனது தனது தந்தையின் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு ‘கோதவா’ என்னும் தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

ஆனால் இவரை தமிழ் சினிமாவில் முதலில் அறிமுகம் செய்தவர்  இயக்குனர் வெங்கட் பிரபு தான். வெங்கட் பிரபு இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியான “சரோஜா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து “மங்காத்தா, சென்னை 28-2,” போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘மேயாத மான்’ படத்தின் மூலம் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் உருவாகினர்.

வைபவ் தற்போது காட்டேரி, ஆர் கே நகர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் வைபவ்வின் மனைவி மற்றும் மகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.


 


Advertisement