ரஜினி படமா வேண்டவே வேண்டாம்.. தலை தெறிக்க ஓடிய பிரபல நடிகை!

ரஜினி படமா வேண்டவே வேண்டாம்.. தலை தெறிக்க ஓடிய பிரபல நடிகை!



Vaijayanthimala rejected Rajini movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர்கள் நடிக்க பல நடிகர், நடிகைகள் போட்டி போட்டு வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் ரஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும், நடிக்க மறுத்த நடிகை ஒருவர் உள்ளார்.

rajinikanth

அதன்படி, தனது நடிப்பாலும், அழகான ரசிகர்களின் மனதை வென்ற வைஜெயந்திமாலா நடிகர் ரஜினி படத்தில் நடித்த அழைப்பு வந்தபோது மறுப்பு தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை நடிகர் ரஜினி சமீபத்தில் மேடை ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

அதன்படி ரஜினியின் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தில் மாமியார் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகை வைஜெயந்தி மாலா மறுப்பு தெரிவித்துள்ளார். படக்குழுவினர் தரப்பில் மிகப்பெரிய தொகை கொடுப்பதாக கூறப்பட்ட நிலையிலும் அவர் வேண்டமே வேண்டாம் என மறுப்பு தெரிவித்துள்ளார்.

rajinikanth

அதற்கு காரணம் மாப்பிள்ளை திரைப்படத்தில் மாமியார் கதாபாத்திரத்திற்கும், நடிகர் ரஜினி கதாபாத்திரத்திற்கும் மோதல் நிறைந்த காட்சிகள் அதிகமாக இருந்தது. அதனால் ரஜினிகாந்தை என்னால் திட்ட முடியாது என்ற காரணத்திற்காக இந்த வாய்ப்பை அவர் நிராகரித்துள்ளார்.