ஷூட்டிங் ஸ்பாட்டில் தலைவர் வடிவேலு செய்த ரகளை! விழுந்து விழுந்து சிரித்த நடிகை ராதிகா! வீடியோ இதோ!!

ஷூட்டிங் ஸ்பாட்டில் தலைவர் வடிவேலு செய்த ரகளை! விழுந்து விழுந்து சிரித்த நடிகை ராதிகா! வீடியோ இதோ!!



vadivelu-recreate-surya-movie-comedy-scene-video-viral

தமிழ் சினிமாவையே கலக்கி, ஹீரோக்களுக்கு இணையாக ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. பின் ஹீரோவாகவும் அவதாரமெடுத்து அவர் சில படங்களில் நடித்துள்ளார். இடையில் சில பிரச்சினைகளால் படத்தில் நடிக்காமல் இருந்த வடிவேலு தற்போது மீண்டும் தடைகள் நீங்கி நடிக்க துவங்கியுள்ளார்.

அவர் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன் போன்ற படங்களில் நடிக்கிறார். மேலும் நடிகர் வடிவேலு இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்திலும் நடித்து வருகிறார். இதில் ராகவா லாரன்ஸ், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு மைசூரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் வடிவேலு செய்த ரகளை வீடியோவை நடிகை ராதிகா தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதாவது வடிவேலு சூட்டிங் ஸ்பாட்டில் சுறா படத்தின் கச்சேரி சீனை ரீக்கிரியேட் செய்து நடித்து காட்டியுள்ளார். அதனைக் கண்டு ராகவா லாரன்ஸ் மற்றும் ராதிகா ஆகியோர் வயிறு குலுங்க சிரித்துள்ளனர். அந்த வீடியோவை தனது டுவிட்டரில் ஷேர் செய்த நடிகை ராதிகா இந்த காமெடி சீன் எந்த படத்தில் இடம்பெறும் என்ற கேள்வியையும் கேட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.