#Breaking: அமரன் படத்தை பார்த்து கண்கலங்கி அழுத ரஜினிகாந்த்; காரணம் என்ன?.. அவரே சொன்ன தகவல்.!
வந்துட்டாருய்யா.. ரீ என்ட்ரி கொடுக்கும் வைகைபுயல் வடிவேலு! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே செம கெத்து காட்டுதே!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் முன்னணி காமெடி நடிகராகவும், பின்னர் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் வடிவேலு. ஒரு சில காரணத்தால் இவர் நடிப்பதற்கு தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்திருந்த நிலையில் அண்மையில் அந்த தடை நீக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் தற்போது மீண்டும் நடிக்கத் தயாராகியுள்ளார்.
நடிகர் வடிவேலு சுராஜ் இயக்கத்தில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். வடிவேலுவின்
இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்நிலையில் தற்போது அப்படத்தின் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியாகியுள்ளது. படக்குழுவினர் படத்திற்கு ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ என தலைப்பு வைத்துள்ளனர். இந்த போஸ்டரில் வடிவேலு கோட் சூட்டுடன் ஐந்து நாய்களுடன் செம கெத்தாக உள்ளார்.
Vandhutanya Vandhutanya!!! 📣
— Lyca Productions (@LycaProductions) October 8, 2021
🤓 Here is the First Look of all time Entertainer #Vaigaipuyal #Vadivelu in #NaaiSekarReturns@Director_suraaj @Music_Santhosh @UmeshJKumar @dharmachandru @Yuvrajganesan @proyuvraaj @teamaimpr pic.twitter.com/KoFsShV267
இதற்கு முன்பு படத்திற்கு நாய் சேகர் என தலைப்பு வைக்க பிளான் செய்திருந்தனர். ஆனால் ஏற்கனவே சதீஷ் நடித்துள்ள படத்திற்கு இந்த தலைப்பு வைக்கப்பட்டு அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அண்மையில் வெளியானது. அதனைத் தொடர்ந்தே படக்குழுவினர் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற தலைப்பை வடிவேலுவின் படத்திற்கு தேர்வு செய்துள்ளனர்.