தலைவன் வடிவேலு அந்நியன் படத்தில் நடித்திருந்தால் எப்படியிருந்திருக்கும்.. வயிறு குலுங்க சிரிக்கவைக்கும் வீடியோ!!

தலைவன் வடிவேலு அந்நியன் படத்தில் நடித்திருந்தால் எப்படியிருந்திருக்கும்.. வயிறு குலுங்க சிரிக்கவைக்கும் வீடியோ!!


Vadivelu may act in aaniyan movie

தமிழ் சினிமாவில் பல பிரபலங்களின் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து முன்னணி காமெடி நாயகனாக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. நடிகர் வடிவேலுவின் டயலாக், பாடி லாங்குவேஜ் என அனைத்தும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.

மேலும் தற்காலத்தில் இணையத்தை கலக்கிவரும் மீம்ஸ் மற்றும் ட்ரோல்களுக்கு தலைவரது வசனங்களே பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் இடையில் சில காலங்கள் அவர் நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவை நீங்கி வடிவேலு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் வடிவேலு விக்ரம் நடிப்பில் வெளிவந்து திரையரங்குகளை அதிர வைத்த அந்நியன் படத்தில் நடித்திருந்தால் அவரது டயலாக்குகள் எப்படி இருந்திருக்கும் என்பதை நெட்டிசன்கள் எடிட் செய்து வீடியோவாக வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ வைரலாக ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளது.