அட.. தலைவரோட குசும்புக்கு எண்டே இல்லை.. ஏர்போர்ட்டில் ஜாலியாக நடிகர் வடிவேலு செய்த வேலையை பார்த்தீர்களா! வைரல் புகைப்படம்!!

அட.. தலைவரோட குசும்புக்கு எண்டே இல்லை.. ஏர்போர்ட்டில் ஜாலியாக நடிகர் வடிவேலு செய்த வேலையை பார்த்தீர்களா! வைரல் புகைப்படம்!!


vadivelu-jolly-speak-with-airport-labours

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. இவர் ஹீரோக்களுக்கு இணையாக ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து ஹீரோவாகவும் அவதாரமெடுத்து அவர் சில படங்களில் நடித்துள்ளார். 

இடையில் சில பிரச்சினைகளால் படத்தில் நடிக்காமல் இருந்த வடிவேலு தற்போது தடைகள் நீங்கி மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். அவர் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன், சந்திரமுகி 2 படத்திலும் நடித்து வருகிறார்.

Vadivelu

இந்த நிலையில் ஏர்போர்ட்டில் ரசிகர்களுடன் வடிவேலு செய்த ரகளைகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது வடிவேலு ஏர்போர்ட்டில் இருந்த ஊழியர்கள் அனைவரிடமும் சிரித்து கலகலப்பாக பேசியுள்ளார். செல்பியும் எடுத்துள்ளார். மேலும் அங்கே மொட்டை அடித்துள்ள பெண் ஒருவரின் தலையை தடவி பார்த்து கமெண்ட் அடித்து, சிரிக்க வைத்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.