
சூப்பர்.. பிரபல நடிகருடன் இணையும் வைகை புயல் வடிவேலு! அட..இயக்குனர் யாருனு பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் கூட்டணியில் இணைந்து தனது காமெடியால் மக்கள் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வைகைப்புயல் வடிவேலு. தனது வசனங்கள், முகபாவனைகள் என அனைத்தாலும் அவர் மக்களை சிரிக்க வைத்தார்.
இந்நிலையில் பிரபல இயக்குனருடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக வடிவேலுவுக்கு நடிப்பதற்கு தடை விதித்து ரெட் கார்டு போடப்பட்டது. அதனால் அவர் எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் தற்போது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது. மேலும் அவரும் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அந்த வகையில் நடிகர் வடிவேலு தற்போது பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் ஹீரோவாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார். இதில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Advertisement
Advertisement