BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
அட.. இது சூப்பரான நியூஸாச்சே.! செம எதிர்பார்ப்பில் தளபதி ரசிகர்கள்! என்ன விஷயம் தெரியுமா??
தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தனது 66வது படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் சரத்குமார்,பிரபு, ஷாம், பிரகாஷ் ராஜ், குஷ்பு உள்ளிட்ட பல பெரும் நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
வாரிசு படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் தயாரிக்கின்றது. படம் 2023 பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒவ்வொரு அப்டேட்டிற்காகவும் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது வாரிசு படம் குறித்த சூப்பரான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் மாதம் மிக பிரமாண்டமாக நடைபெற இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே இறுதியாக விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை. அதுவே ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்த நிலையில் இந்த தகவல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.