டிசம்பர் 1..!! தேதியை குறிச்சு வச்சுக்கோங்க!! தமிழ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம விருந்து!!

டிசம்பர் 1..!! தேதியை குறிச்சு வச்சுக்கோங்க!! தமிழ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம விருந்து!!



vaa-varalaam-vaa-movie-release-date

எஸ்.ஜி.எஸ். கிரியேட்டிவ் மீடியா எஸ்பிஆர் தயாரிக்கும் திரைப்படம் "வா வரலாம் வா". தயாரிப்பாளர் எஸ்பிஆர், இயக்குநர் எல்.ஜி. ரவிசந்தர் உடன் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளார். 

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ் இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக கருமேகங்கள் கலைகின்றன படத்தில் நடித்த மஹானா சஞ்சீவி நடித்திருக்கிறார். 

இப்படத்தின் வில்லனாக "மைம்" கோபி நடிக்க, முதன்மையான கதாபாத்திரத்தில் ரெடின் கிங்ஸ்லீ, காயத்ரி ரேமா நடித்திருக்கின்றனர்.

Vaa varalaam vaa

இவர்களுடன் சிங்கம்புலி, சரவண சுப்பையா, தீபா, காயத்ரி ரெமா, வையாபுரி, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், போண்டா மணி, மீசை ராஜேந்திரன், கிரேன் மனோகர், ரஞ்சன், திலீபன், பிரபாகரன், யோகி ராமசாமி, வடிவேல் பீட்டர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். முக்கியமாக இந்த படத்தில் 40 குழந்தைகளும் நடித்திருக்கிறார்கள். 

இசையமைப்பாளராக தேனிசைத்தென்றல் தேவா, ஒளிப்பதிவாளராக கார்த்திக் ராஜா, எடிட்டராக ராஜா முகமது, நடன இயக்குநராக நோபல் மாஸ்டர், சண்டை பயிற்சியாளராக மாஸ்டர் இளங்கோ என திரைத்துறையில் சாதித்த தொழில்நுட்ப கலைஞர்களே இப்படத்தில் பணியாற்றி உள்ளனர்.

Vaa varalaam vaa

ஏற்கனவே 'வா வரலாம் வா' படத்தின் First Look வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், "வா வரலாம் வா" திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை, படத்தின் தயாரிப்பு நிறுவனமான எஸ்.ஜி,எஸ் கிரியேட்டிவ் மீடியா தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதன்படி, வரும் டிசம்பர் மாதம், 01 ஆம் தேதி "வா வரலாம் வா" திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.