தமிழகம்

எனக்கு இவையெல்லாம் வேண்டாம்! ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த நடிகர் உதயநிதி! வைரலாகும் ட்விட்டர் பதிவு.

Summary:

Udhyanidhi Twitter

தமிழ் சினிமாவில் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் உதயநிதி. அதனை தொடர்ந்து மனிதன், நண்பேன்டா, கண்ணே கலைமானே போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது திமுக இளைஞர் அணி செயலாளராக இருந்து வருகிறார்.

மேலும் இவர் சிறந்த தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் ரெட் செயின்ட் என்ற நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகர் உதயநிதி ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

அதாவது தன்னுடைய புகைப்படங்களை எங்கும் பயன்படுத்த வேண்டாம் எனவும், தனக்கு பட்டப்பெயர் குறிப்பிட்டு பேனர் எதையும் வைக்க வேண்டாம் எனவும் அன்பான வேண்டுகோள் ஒன்றை தன் ரசிகர்களிடம் உதயநிதி கூறியுள்ளார்.

மேலும் இனி, நான் சம்பந்தப்படாத, கலந்துகொள்ளாத நிகழ்ச்சிகள் பற்றிய நாளிதழ் அறிவிப்புகள், சுவரொட்டிகள், அழைப்பிதழ்களில் என் புகைப்படத்தை கழகத்தினர் பயன்படுத்தக்கூடாது. மேலும் பட்டப்பெயர்கள் சூட்டுவதையும், நிகழ்ச்சிகளுக்கு வரும்போது பட்டாசு வெடிப்பதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.


Advertisement