சினிமா

பார்க்க குழந்தை போல் இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா? வைரலாகும் புகைப்படம்.!

Summary:

Udhayanithi stalin son photo goes viral

கடந்த 2002ம் ஆண்டு தனது கல்லூரி தோழி கிருத்திகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில் இவர்களுக்கு இவர்களுக்கு இன்பநிதி என்ற மகனும் தன்மயா என்ற மகளும் உள்ளனர்.

இவர்கள் இருவரின் புகைப்படமும் இதுவரை இணையத்தில் பெரிதாக வெளிவராதநிலையில் தற்போது தனது மகனுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

உதயநிதிக்கு தற்போது 42 வயது  ஆகும் நிலையில் அவருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா என ரசிகர்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர். சினிமாவில் மட்டுமே ஆர்வம் காட்டி வந்த உதயநிதி, தனது தாத்தா கருணாநிதியின் மறைவுக்கு பின் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். 

தற்ப்போது திமுக கட்சியின் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார் உதயநிதி.


Advertisement