சினிமா

பரபரப்புக்கு மத்தியில் நடிகர் பார்த்திபனிடம் வருத்தம் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்! அதுவும் யாருக்காக, எதற்காக தெரியுமா?

Summary:

திமுக எம்பி ஒற்றைச் செருப்பு திரைப்படம் குறித்து கிண்டல் செய்ததற்கு வருத்தம் தெரிவித்து உதயநிதி ஸ்டாலின் பார்த்திபனுக்கு ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பார்த்திபன், தயாரித்து, இயக்கி, நடித்த திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7 . இந்த திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இப்படத்திற்கு பல விருதுகளும் கிடைத்தது. இந்நிலையில் சமீபத்தில்  கோவாவில் தேசிய திரைப்படவிழா நடைபெற்றது. அங்கு ஒத்த செருப்பு படம் திரையிடப்பட்ட போது, இந்தியன் பனோரமா சார்பில் அப்படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டது. அது கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசிதழில் வெளியானது. 

இந்நிலையில் இந்த செய்தியை குறிப்பிட்டு, திமுக எம்.பி.செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அண்ணணுக்கு பா.ஜ.கல ஒரு சீட்டு பார்சல் என கிண்டல் செய்திருந்தார். இந்நிலையில் இதனைக்கண்ட பார்த்திபன் அவர்கள் அதற்கு பதிலளிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து அறிந்த உதயநிதி ஸ்டாலின் உடனே திமுக எம்பி செய்த தவறுக்கு வருத்தம் தெரிவித்து பார்த்திபனுக்கு ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளாராம். 

 இதுகுறித்து பார்த்திபன் மற்றொரு ட்வீட்டில் கடைசியாக வந்த செய்தி – சூரியன் உதிக்கும்முன் கண் விழித்த எனக்கு, திமுகவின் நம்பிக்கை நட்சத்திரமும், உடன்பிறப்புகளின் எதிர்கால நம்பிக்கையுமான என் நண்பர் திரு உதயநிதி ஸ்டாலின் அச்செய்திக்கு வருத்தம் தெரிவித்து எனக்கு ஒலிப்பதிவு செய்துள்ளதை கேட்டேன். அவருடைய பெருந்தன்மையைக் கண்டு என் கோப வார்த்தைகளை மேற்படி கோடிட்ட இடங்களாக மாற்றினேன்” எனத் தெரிவித்துள்ளார். 


Advertisement