விஜய் டிவியில் இந்த இரு சீரியல்களில் மட்டும் ஏற்பட்ட பெரும் மாற்றம்! செம உற்சாகத்தில் ரசிகர்கள்!

two serial time changing


two-serial-time-changing

பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான சேனல்களும் ஒன்று விஜய் தொலைக்காட்சி. இதில் புதுமையான நிகழ்ச்சிகளை மிகவும் விறுவிறுப்பாக மக்களுக்கு வழங்கி வருவதால் விஜய் டிவிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். மேலும் அதன் மூலம் டிஆர்பி எகிறியது.

 மேலும் புதுப்புது கேம் ஷோக்கள், திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் ரியாலிட்டி ஷோக்கள், கொண்டாட்டம், வித்தியாசமான கதைகளம் கொண்ட சீரியல் என மக்கள் மனதில் மாபெரும் பங்குவகிக்கிறது விஜய்டிவி. அதுமட்டுமின்றி விஜய் தொலைக்காட்சியில் பணிபுரிந்தவர்கள் தற்போது  வெள்ளித்திரையிலும் கலக்கி வருகின்றனர். 

இந்நிலையில் விஜய் டிவியில் ரசிகர்களிடையே பெரும் அளவில் பிரபலமாகி மிகவும் ஆர்வத்துடன் பார்த்து வரும் சீரியல்கள் காற்றின் மொழி மற்றும் அரண்மனைக்கிளி. ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருகென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இதுவரை அரை மணி நேரம் மட்டுமே ஒளிபரப்பாகி வந்த இந்த இரு தொடர்களும் இனி மிகவும் வித்தியாசமாக 45 நிமிடம் ஒளிபரப்பாக உள்ளது.இதனை விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது அதாவது காற்றின் மொழி தொடர் 9 முதல் 9.45 வரையும் அரண்மனைக்கிளி 9.45 முதல் 10.30 வரையும் ஒளிபரப்பாக உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.