சினிமா

போதைப்பொருள் வழக்கில் சிக்கி பிரபல நடிகை அதிரடி கைது! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Summary:

பிரபல டிவி நடிகை ப்ரீத்திகா சவுகான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலிவுட் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்து, முன்னணி நடிகராக பிரபலமடைந்த  சுஷாந்த் சிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பல தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும் இவரது மரணத்திற்கு காரணம் பாலிவுட் உலகில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் மற்றும் போதைப்பொருள் புழக்கம்தான் என குற்றச்சாட்டுகள் பிறப்பிக்கப்பட்டது. 

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதை தொடர்ந்து சுஷாந்த் சிங் காதலியுமான ரியா சக்கரவர்த்தி, 
ரியாவின் சகோதரர் சோவிக், சுஷாந்தின் மேனேஜர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய பிறகு,  நடிகைகள் ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோனே, ஷரத்தா கபூர், சாரா அலிகான்  ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணையும்  நடைபெற்றது.

இந்த நிலையில் தற்போது சி.ஐ.டி, தேவோ கே தேவ் மகாதேவ், சாவ்தான் இந்தியா, ஹனுமான்  போன்ற டிவி தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமான ப்ரீத்திகா சவுகான் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் நபர் ஒருவரிடம் போதை பொருள் வாங்கியபோது கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement