பிரபல டிவி சீரியல் நடிகை திடீரென தூக்கிட்டு தற்கொலை.. தற்கொலை குறிப்பில் பகீர்.. இப்படியொரு நிலையா?..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!



tv-actress-suicide-for-her-first-lover-torture

பிரபல டிவி சீரியல் நடிகை தனது முன்னாள் காதலரின் தொந்தரவால் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல டிவி நடிகை வைஷாலி டக்கர். இவர் பாசுரல் திமிருக்கா சூப்பர் சிஸ்டர், Vish Ya Amrit: Sitara, Manmohini 2, Yeh Rishta Kya உள்ளிட்ட தொடர்களில் நடித்து இடம்பிடித்தார். இவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் அபிநந்தன் என்ற டாக்டருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

ஆனால், அதற்குப்பின் திருமணத்தை நிறுத்திவிட்டார். இவரது நிச்சயதார்த்த வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிட்டார். கடந்த 5 நாட்களுக்கு முன்னதாக கூட வைஷாலி இன்ஸ்டாகிராமில் ரில்ஸ் வீடியோவை வெளியிட்டிருந்த நிலையில், நேற்று இந்தூரில் திடீரென  தூக்கிட்டு தற்கொலை செய்து உயிரிழந்தார். 

tv actress suicide

இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளவே, வைஷாலியின் அறையில் இருந்து ஒரு கடிதம் கிடைத்திருக்கிறது. அதில் வைஷாலின் முன்னாள் காதலர் அவரை தொந்தரவு செய்துவந்தது தெரிந்திருப்பதாக காவல்துறையினர் கூறியிருக்கின்றனர். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.