சினிமா

அப்டியா!! விஜய் டிவியின் அந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் எகியிருடுச்சாமே!! சன் டிவிக்கு பின்னடைவா?

Summary:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி சீரியல் TRP யில் டாப் 5 க்குள் வந்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி சீரியல் TRP யில் டாப் 5 க்குள் வந்துள்ளது.

TRP யில் முன்னிலை பெறவேண்டும் என்பதற்காகவே அனைத்து முன்னணி தொலைக்காட்சிகளும் புது புது சீரியல்களை ஒளிபரப்பிவருகிறது. அதில் சன் டிவி, விஜய் டிவி பற்றி சொல்லி தெரியவேண்டியது இல்லை. அந்த அளவிற்கு இரண்டு தொலைக்காட்சிகளும் சீரியலில் ஆதிக்கம் செலுத்துவருகிறது.

இந்நிலையில் இந்த வருடத்தின் 12வது வாரத்தின் டிஆர்பி ரேட்டிங் விவரங்கள் வெளியாகி உள்ளது. அதில் வழக்கம்போல் சன் டிவியின் ரோஜா சீரியல் முதல் இடத்திலும், விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா - ராஜா ராணி மெகா சங்கமம் 2 வது இடம் பிடித்துள்ளது.

சன் டிவியில் ஒலிபரான சர்க்கார் படம் மூன்றாம் இடத்தை பிடித்து உள்ளது. இதில் புதிதாக நான்காவது இடத்தை பிடித்துள்ளது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல். ஒரு இல்லத்தரசியின் கஷ்டங்களை எடுத்து காட்டும் இந்த தொடருக்கு சமீபகாலமாக மக்களின் ஆதரவு பெருகியுள்ளது.

இதனால் பாங்க்யலட்சுமி தொடர் TRP யில் நான்வது இடத்தை பிடித்துள்ளது. இதனால் சன் டிவியின் வானத்தை போல சீரியல் ஐந்தாம் இடத்திற்க்கு தள்ளப்பட்டு உள்ளது.

 


Advertisement