லியோ படபிடிப்பின் போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த த்ரிஷா.. லீக்கான புகைப்படத்தால் அதிர்ச்சியடைந்த படக்குழு.!Trisha posted photos in instagram at leo shooting

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் தமிழில் 'உனக்கு 20  எனக்கு 18' திரைப்படத்தின் மூலம் தமிழில் பிரபலமான நடிகையாக அறியப்படுகிறார். இப்படத்திற்கு முன்பு சில துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த திரிஷா படிப்படியாக தனது நடிப்பு திறமையின் மூலம் கதாநாயகியாக உயர்ந்தார்.

trisha

மேலும் நடிகை திரிஷா தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் முதல் மற்றும் இரண்டாம் பாகம் மிகப்பெரும் வெற்றி பெற்று ரசிகர்களை மத்தியில் பாராட்டை பெற்று வந்தது.

இதனையடுத்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படமான 'லியோ' வில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கும் புகைப்படங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருவார் த்ரிஷா.

trisha

அவ்வாறு தற்போது நடிகர் திரிஷா காஷ்மீரில் விஜயுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இவர் பதிவிட்டு இருக்கும் மற்ற புகைப்படங்களை விட இப்புகைப்படத்திற்கு 25 லட்சம் லைக் குவிந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.