அடேங்கப்பா.. 300 கோடி பட்ஜெட்.! பிரபல பான் இந்தியா நடிகருக்கு ஜோடியாகிறாரா திரிஷா!! வெளிவந்த சூப்பர் தகவல்!!

அடேங்கப்பா.. 300 கோடி பட்ஜெட்.! பிரபல பான் இந்தியா நடிகருக்கு ஜோடியாகிறாரா திரிஷா!! வெளிவந்த சூப்பர் தகவல்!!


trisha-may-act-with-allu-arjun-22-movie-as-heroine

தமிழ் சினிமாவில் தற்போது ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருப்பவர் நடிகை திரிஷா. இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடிக்கிறார். 

பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் கமலின் 234வது படத்தில் நடிக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளிவந்தது. தொடர்ந்து நடிகை திரிஷா மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் ராம் பார்ட் 1 என்ற படத்திலும் நடிக்கிறாராம்.

allu arjun

இவ்வாறு மீண்டும் சினிமா துறையை தன் கைவசம் கொண்டு பிஸியாக இருக்கும் த்ரிஷா அதற்கு அடுத்ததாக அல்லு அர்ஜுனின் 22வது படத்தில் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. மேலும் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கவுள்ளாராம்.  இப்படம் 300 கோடி பட்சத்தில் பிரம்மாண்டமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.