அடேங்கப்பா.. இவ்வளவா?? திடீரென தனது சம்பளத்தை உயர்த்திய நடிகர் திரிஷா.! ஓ. இதுதான் காரணமா.!

அடேங்கப்பா.. இவ்வளவா?? திடீரென தனது சம்பளத்தை உயர்த்திய நடிகர் திரிஷா.! ஓ. இதுதான் காரணமா.!



Trisha increase her salary after ponniyin selvan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. அவர் ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அதனை தொடர்ந்து அவர் லேசா லேசா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின் உனக்கு 20 எனக்கு 18 படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான அவர் தொடர்ந்து அஜித், விஜய், விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார. 

மேலும் அவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமும் உருவானது. நடிகை திரிஷா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார்.  கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக திரைத்துறையில் வலம்வரும் அவர் சில காலங்கள் சொல்லி கொள்ளுமளவிற்கு பெரும் படவாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த நிலையில் விஜய் சேதுபதியுடன் நடித்த 96 படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து அவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வரவேற்பு பெற்ற பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார்.

பொன்னியின் செல்வன்

மேலும் விரைவில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகமும் வெளியாகவுள்ள நிலையில் திரிஷா பல படங்களில் தொடர்ந்து கமிட்டாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது இந்நிலையில் அவர் தனது சம்பளத்தையும் உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பொன்னியின் செல்வன் படத்திற்கு முன்பு ரூ1.5 கோடி சம்பளம் வாங்கிய அவர் தற்போது புதிதாக கமிட்டாகும் படங்களுக்கு 3 கோடி வரை சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது.