BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
நடிகை திரிஷா தன் பெயரை இப்படி மாத்திட்டாரா? அவரே கூறிய அசத்தலான பதில்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை திரிஷா. ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகை திரிஷாவின் கைவசம் கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, ராங்கி, சுகர், 1818, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் உள்ளன. த்ரிஷா இதுவரை 68 படங்களில் நடித்துள்ளார். அவருடைய 68-வது படமான பரமபதம் விளையாட்டு அண்மையில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த படத்தில் டைட்டிலில் திரிஷா என்பதற்கு பதில் த்ர்ஷா என போடப்பட்டிருந்தது. இதை வைத்து திரிஷா பெயர் மாற்றம் செய்துவிட்டதாக தகவல்கள் பரவியது.

இந்த நிலையில் இதுகுறித்து திரிஷா கூறுகையில், நான் பெயர் மாற்றம் செய்யவில்லை. அதற்கு அவசியமில்லை. திரிஷா என்ற அழகான பெயர் இருக்கும்போது, அந்த பெயரை ஏன் மாற்ற வேண்டும்? வதந்திகளை என் ரசிகர்கள் நம்ப மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.