வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
நீங்க அவங்களோட பேசவே கூடாது! திரிஷாவுக்கு மணிரத்னம் போட்ட கண்டிஷன்!! அட.. ஏன்னு பார்த்தீங்களா!!
இயக்குனர் மணிரத்னத்தின் நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு தற்போது பிரம்மாண்டமாக உருவாகியுள்ள அவரது கனவு திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை தழுவி எடுக்கபட்ட இப்படம் இருபாகங்களாக உருவாகியுள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தியும், ஆதித்த கரிகாலனாக விக்ரமும் , அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். மேலும் குந்தவையாக திரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார் மற்றும் சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
பொன்னியின் படத்தின் கதைப்படி நந்தினியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக நடித்துள்ள திரிஷாவும் எதிரிகள். இருவரும் மோதிக் கொள்ளும் காட்சிகளும் உள்ளது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் நடிகை திரிஷா கூறுகையில், ஐஸ்வர்யா ராய் கூட நான் ரொம்ப ஜாலியாக அரட்டையடித்து பேசிகிட்டு இருப்பேன். இயக்குனர் மணி சார் எங்கள் இருவரையும் ஒன்றாக பார்த்தால் திட்ட ஆரம்பிவிடுவார். நந்தினியும் குந்தவையும் எதிரிகள். இப்படி ஜாலியா சகஜமாக உட்கார்ந்து பேசக் கூடாது. அது படத்தில் உங்களது கேரக்டரை பாதிக்கும். செட்டிலும் பொன்னியின் செல்வன் பட கதாபாத்திரங்களாகவே இருக்கச் சொல்வார் என சிரித்தவாறே கூறியுள்ளார்.