லியோ ரிலீசுக்கு முன்பு அதிரடி காட்டிய த்ரிஷா... அட்டகாசமான அப்டேட்டை வெளியிட்ட படக் குழு.!

லியோ ரிலீசுக்கு முன்பு அதிரடி காட்டிய த்ரிஷா... அட்டகாசமான அப்டேட்டை வெளியிட்ட படக் குழு.!



trisha-action-avatar-wll-be-released-before-leo-update

22 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் த்ரிஷா. இவர் தமிழ் சினிமாவின் அத்தனை முன்னணி ஹீரோக்களுக்கும் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த வருடம் இவரது நடிப்பில் உருவான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அதனைத் தொடர்ந்து தளபதி விஜய் உடன் ஐந்தாவது முறையாக இணைந்து லியோ  திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது.

Kollywoodஇந்நிலையில் த்ரிஷாவின் மற்றொரு திரைப்படம் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. மேலும் அந்தத் திரைப்படம் லியோ திரைப்படத்திற்கு முன்பாக ரிலீஸ் ஆக இருப்பதாகவும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தி ரோட் என்று பெயரிடப்பட்ட அந்த திரைப்படத்தில் திரிஷா ஆக்சன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அறிமுக இயக்குனரான அருண் வசீகரன் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில்  சார்பட்டா பரம்பரையின் மூலம் டான்சிங் ரோஸாக புகழ்பெற்ற ஷபீர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். வருகின்ற அக்டோபர் ஆறாம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.