"வெந்து தணிந்தது காடு, வெள்ளத்தில் மிதந்தது பல வீடு" - நிவாரண பொருட்களை வழங்கி தனது பாணியில் குமுறிய ராஜேந்தர்.!

"வெந்து தணிந்தது காடு, வெள்ளத்தில் மிதந்தது பல வீடு" - நிவாரண பொருட்களை வழங்கி தனது பாணியில் குமுறிய ராஜேந்தர்.!



tr-pressmeet-at-chennai-kannagi-nagar

 

சென்னை கண்ணகி நகர் பகுதியில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இன்று நடிகர் விஜய டி ராஜேந்தர் தனது கரங்களால் அத்தியாவசிய பொருட்களை வழங்கியதை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்தார். 

இந்த சந்திப்பில், "வெள்ளத்தின்போது களத்தில் நின்று உதவிய எஸ்.டி.ஆர் ரசிகர்களுக்கு மிகுந்த நன்றி. அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவே இந்நிகழ்ச்சிக்கு நான் வந்துள்ளேன். 

பெங்களூரில் இருந்து ரசிகர் மன்றம் சார்பிலும் உதவி செய்ய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உறுதுணையாக இருந்த அனைவர்களுக்கும் நன்றி. என்னை மட்டுமல்லாது, என் மகனையும் வாழவைத்த மக்களுக்கு கட்டாயம் நான் உதவி செய்வேன். 

நான் ஒருதலை ராகத்தில் அறிமுகமான ஒரு தல என்று கூறினால், எனது மகன் பத்து தல அளவுக்கு உயர்ந்துள்ளார். தமிழ் மக்களுக்கு நான் செய்யும் நன்றிக்கடன் இது. என்னை அவர்கள் வாழவைத்தார்கள். 

கஷ்டப்பட்ட மக்களுக்கு உதவி செய்தவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். என் கையால் அரிசியை எடுத்துக்கொடுக்கும்போது, மக்களின் முகத்தில் சிரிப்பை பார்த்தேன். அதற்கு ஈடு எதுவும் இல்லை. 

கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்த மழை மீண்டும் பெய்துள்ளது. வெந்து தணிந்தது காடு, வெள்ளத்தில் மிதந்தது பல வீடு, விழிபிதுங்கி நின்றது தமிழ்நாடு, விண்ணில் இருந்து கொட்டக்கூடிய பெருமழை போட்டது ஒரு போடு. 

அம்மா வான்மழையே இதற்கு மேல் எங்கள் நாடு தாங்காது. பட ரிலீஸ் அன்று பாலபிஷேகம் செய்யும் மன்றத்தார் தேவையில்லை. ஏழை மக்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என நினைத்தவர்கள் செயலே உண்மையான மன்றம்" என பேசினார்.