யார் வந்தாலும் போனாலும் நாங்க தான் எப்பவுமே கெத்து.! தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் 5 நடிகைகள்.!top5hiroingsintamil

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் நடிகை ஒருவருக்கு திருமணம் ஆகிவிட்டால், அவருடைய மார்க்கெட் மெல்ல, மெல்ல சரியத் தொடங்கிவிடும். ஆனாலும் ஒரு காலத்தில் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த நடிகைகள் அனைவருமே ஒரு குழந்தையை பிறந்து அதன் பிறகு நடிக்க வந்தவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனாலும் இன்றைய காலகட்டத்தை பொறுத்தவரையில் பல மூத்த நடிகைகள் தான் முன்னிலையிலிருந்து வருகிறார்கள். மேலும் அவர்களின் திரைப்படங்கள் தான் வரவேற்பை பெற்று வருகிறது.

Nayandharaநயன்தாரா-அந்த வகையில், சற்றேறக் குறைய 20 வருட காலமாக கோலிவுட் திரையுலகை கலக்கி வருபவர் தான் நடிகை நயன்தாரா. ஒரு திருமணமாகி குழந்தை பிறந்த பின்னரும் கூட, இன்று வரையில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா, சமீபத்தில் அன்னபூரணி என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படம் தற்போது திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

காஜல் அகர்வால்- முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்த காஜல் அகர்வால் திடீரென்று தான் திருமணம் செய்து கொள்ள போவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். திருமணத்திற்கு பின்னர் குழந்தை பிறந்ததும் உடல் எடை அதிகரித்து காணப்பட்ட இவர், தன்னுடைய எடையை குறைத்து தற்போது கமல்ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன்-2 திரைப்படத்தில் நடித்து வருவதோடு பல திரைப்படங்களை தன் கைவசம் வைத்திருக்கிறார்.

Nayandhara

தமன்னா- தமிழ் திரைத்துறையில் மிக நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஜெய்லர் திரைப்படத்தில் காவாலா என்ற பாடலுக்கு நடனமாடி மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் தான் தமன்னா. இவர் திரைத்துறை பக்கம் தலை காட்டவில்லை என்றாலும், தன்னை எப்போதும் பிஸியாகவே வைத்திருக்கிறார். மேலும் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வித விதமான புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை உற்சாகப்படுத்துவதோடு ஹிந்தி திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார். 

சமந்தா- விவாகரத்துக்கு பின்னர் சமந்தா திரைத்துறைக்கு ஒரு நீண்ட இடைவேளை விட்டிருந்தார். அதன்பிறகு புஷ்பா திரைப்படத்தில் யாரும் எதிர்பாராத விதத்தில், கவர்ச்சி நடனத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார். அதன் பின் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததோடு, கடைசியாக குஷி திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக ரசிகர்கள் இவரை கொண்டாட தொடங்கினர். தற்போது சமந்தா தற்காலிக ஓய்வில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.