சினிமா

எந்த நடிகை என்ன படித்துள்ளார் தெரியுமா? சுவாரசியமான தகவல்கள்!

Summary:

Top tamil actress education details in tamil

பொதுவாக நடிகைகள் என்றாலே முகம் நிறைய மேக்கப், வாய் நிறைய இங்கிலிஷ். இப்படித்தான் நாம் அவர்களை பார்த்திருப்போம். அந்த அளவிற்கு ஆங்கிலம் பேசும் நமது நடிகைகள் உண்மைலயே என்ன படித்துள்ளார்கள் தெரியுமா? வாங்க பாக்கலாம்.

நடிகை ஹன்சிகா:
தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிளை திரைப்படம் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக இருந்துவரும் ஹன்ஷிகா 10 ஆம் வகுப்பு வரைமட்டும்தான் படித்துள்ளார்.

நடிகை தமன்னா:
கேடி படத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கலக்கிவரும் தமன்னா 12 ஆம் வகுப்புவரைதான் படித்துள்ளார். 

நடிகை நயன்தாரா:
லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இவர் பாதித்துள்ளது B.A

நடிகை த்ரிஷா:
தமிழ் சினிமாவில் முன்னணி நாடிகளில் ஒருவர் நடிகை த்ரிஷா. இவர் BBA வரை படித்துள்ளார்.
  
நடிகை அனுஷ்கா:
தமிழில் இரண்டு என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழ், தெலுங்கு என கலக்கிக்கொண்டிருப்பவர் நடிகை அனுஷ்கா. பாகுபலி படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இவர் BCA வரை படித்துள்ளார். 

நடிகை கேத்ரின் தெரேசா:
நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படம் மூலம் பிரபலமான கேத்தரின் தெரசா B.Com வரை படித்துள்ளார்.

நடிகை சமந்தா:
தமிழில் பானா கைதட்டி திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா தற்போது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் உள்ளார். சமந்தா B.Com வரை படித்துள்ளார்.

நடிகை ஜெனிலியா:
சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தில் ஹரிணி என்ற பெயரில் அறிமுகமாகி பின்னர் ஜெனிலியா என தனது பெயரை மாற்றிக்கொண்டார். இவர் பாதித்துள்ளது B .Sc 

நடிகை அசின்:
எம் குமரன் சன் ஆப் மகாலஷ்மி திரைப்படத்தில் அறிமுகமாகி கஜினி திரைப்படம் மூலம் தமிழில் பிரபலமான நடிகை அசின் பாதித்துள்ளது B .Sc

நடிகை சாய் பல்லவி:
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சி மூலம் வெளிஉலகிற்கு வந்த நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளியான ப்ரேமம் திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் ஒரு மருத்துவர் ஆவார். ஆம் இவர் MBBS வரை படித்துள்ளார். 


Advertisement