நடிகை நதியாவின் வழியை பின்பற்றி சினிமாவில் வெற்றி பெற்ற நடிகைகள்.. யார் யார் தெரியுமா.?

நடிகை நதியாவின் வழியை பின்பற்றி சினிமாவில் வெற்றி பெற்ற நடிகைகள்.. யார் யார் தெரியுமா.?



Top actress in cini industry

தற்போதைய காலக்கட்டத்தில் கவர்ச்சியில்லாமல் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாது என்ற நிலை உள்ளது. தினமும் புதுப்புது நடிகைகள் அறிமுகமாகி, முதல் படத்தில் இருந்தே கவர்ச்சியில் களம் இறங்கி பட வாய்ப்புகளை கைப்பற்றி வருகின்றனர்.

glamour

ஆனால் இதில் சில நடிகைகள் விதி விலக்காக உள்ளனர். இதுவரை அவர்கள் கவர்ச்சி காட்டாமல் நடித்து ஜெயித்தும் உள்ளனர். அந்த ஐந்து நடிகைகள் யார் என்று இங்கு பார்ப்போம். "பிரேமம்" படத்தில் அறிமுகமானவர் சாய் பல்லவி. இவர் தனது சிரிப்பின் மூலமே ரசிகர் பட்டாளத்தைக் கவர்ந்துள்ளார்.

இதுவரை கவர்ச்சியாக நடிக்காத இவர், திரையுலகில் முக்கியமானவராக இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிப் புகைப்படங்களை பதிவிட்டாலும், படங்களில் அப்படி நடிக்காதவர் கீர்த்தி சுரேஷ். மேலும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கொள்ளை கொண்டவர் ஷாலினி.

glamour

இவர் இதுவரை கவர்ச்சியாக ஒரு படத்தில் கூட நடித்தது இல்லை. மேலும் இன்றும் இளமையுடன் இருக்கும் நடிகை நதியா, படத்தில் நடிக்கும் முன்னமே லிப் லாக் போன்ற காட்சிகள் இருக்க கூடாது என்று சொல்லிவிட்டுத்தான் நடிப்பார். இதே போல் தான் நடிகை ரேவதியும் குடும்பப்பாங்காக நடித்தே அனைவரையும் கவர்ந்தவர்.