தமிழகம் சினிமா

90 ml பார்க்கச் சென்றவருக்கு ரசிகர்கள் கொடுத்த உற்சாக வரவேற்பு; திணறிப் போன ஓவியா

Summary:

today relese 90ml - theater - oviya with fans

இன்று வெளியாகும் 90ml படத்தை ரசிகர்களுடன் காண தியேட்டருக்கு சென்ற நடிகை ஓவியாவுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

இன்று வெள்ளிக்கிழமை, அதாவது மார்ச் 1 ஆம் தேதி 4 படங்கள் வெளியாகி உள்ளது. அதாவது திருமணம், தடம், 90 எம்எல், தாதா 87, என 4 படங்கள் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளன. 90 எம்எல் படத்தில் ஓவியா நடித்துள்ளார். இந்த படம் வெளியாவதற்கு முன்னரே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்துள்ளது.

ஓவியாவை மட்டுமல்ல, இந்த படத்திற்கு இசையமைத்துள்ள நடிகர் சிம்புவையும் நெட்டிசன்கள் விட்டுவைக்கவில்லை. உனக்கு இதெல்லாம் தேவையா என கடிந்து கொண்டனர்.  

இதிலும் சிலர் ஓவியாவை விட்டுக் கொடுப்பதாயில்லை. இந்த மாதிரி படங்களில் நடிக்க ஒரு துணிச்சல் வேண்டும். அது எங்கள் ஓவியாவால் மட்டுமே முடியும் என தலையில் தூக்கி வைக்க துவங்கிவிட்டனர். மேலும் சில ரசிகர்கள் இந்த படத்தை ஆதரிக்க தொடங்கியுள்ளனர் என்றே சொல்லலாம். ஏனெனில் என்று வெளியான 90 ml படத்தை ரசிகர்களுடன் நேரில் காண அதிகாலை காட்சிக்கு சென்ற ஓவியாவிற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.


Advertisement