லெஜண்ட் படத்திற்கு வந்து மாஸ் சம்பவம் செய்த கூல் சுரேஷ்.. சிம்பு நிலைமை என்ன?.. ஆடிப்போன ரசிகர்கள்.!today legend movie released in 5 languages

லெஜண்ட் சரவணன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், நடிகர் கூல் சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசிய தொகுப்பு வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் இது அதிகரித்துள்ளது.

ஜே.டி. ஜெர்ரி இயக்கத்தில் - சரவணா ஸ்டோர்ஸ் அருள் சரவணன், ஊர்வசி, மறைந்த நடிகர் விவேக், சுமன், நாசர் ஆகியோர் நடிப்பில் அட்டகாசமாக உருவாகியுள்ள திரைப்படம் தி லெஜண்ட் சரவணன். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படம் இன்று உலகமெங்கும் 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. படத்திற்கு காலை 4 மணிமுதல் ஸ்பெசல் சோ காட்சிப்படுத்தப்பட்டது.

எந்த ஒரு படத்திலும் நடிக்காதவர் தனது முதல் படத்தில் எப்படி நடிப்பார்? அவர் தேர்வு செய்த கதையம்சம் என்ன? என்று அடுக்கடுக்கான கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில், படத்தை பார்க்க இன்று நடிகர் கூல் சுரேஷ் திரையரங்குக்கு சென்றிருந்தார். 

அப்போது, செய்தியாளர்களிடையே அவர் பேசுகையில், "வெந்து தணிந்தது காடு, லெஜண்ட்க்கு வணக்கத்தை போடு. எனக்கு சிம்பு குலதெய்வம் என்றால், பிற தெய்வங்களான அடுத்த நடிகர்களின் படத்திற்கும் நான் வந்து கருத்து கூறுவேன். லெஜண்ட்க்கு வயது ஆனது போலவே தெரியவில்லை. 

cinema

5 மொழிகளில் திரைப்படம் வெளியாகிறது. நான் லெஜண்ட்டின் ரசிகர் ஆகிவிடுவேனோ என்ற பயம் எனக்கே உள்ளது. ரஜினிகாந்தை போல லெஜெண்ட்டும் வேகமாக நடக்கிறார். அது அவரின் இயல்பா என்று கூட எனக்கு தெரியவில்லை. வெயிலில் வைத்த வெள்ளி சிலை போல பளபளவென இருக்கிறார்

லெஜண்ட் படமும் ரிலீஸ் ஆவதால் தமிழக அரசே அரசு விடுமுறை விட்டுள்ளது. செஸ் போட்டி நடைபெறுவதால் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், அந்த வரவேற்பு லெஜண்ட் சரவணன் படத்திற்கும் கிடைத்துள்ளது. புதுமுக நடிகரை நாம் வரவேற்க வேண்டும்" என்று தெரிவித்தார்.