அடேங்கப்பா.. ஒரேநாளில் தியேட்டரில் ரிலீஸாகும் 5 படங்கள்.! முழு விபரம் உள்ளே.! மிஸ் பண்ணிடாதீங்க.!!Today Day release Movie list

 

தமிழ் திரையுலகில் வெளியாகிய ஐந்து திரைப்படங்கள் இன்று ஒரே நாளில் வெளியாகியுள்ளது.

பம்பர் :

தென் மாவட்ட கலைக்கதைகளை பிரதானமாக தேர்வு செய்து படமாக்கும் இயக்குனர் முத்தையாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த செல்வகுமார் பம்பர் திரைப்படத்தின் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த திரைப்படத்தில் வெற்றி, சிவானி நாராயணன், ஜி.பி.முத்து உட்பட பலரும் நடித்திருக்கின்றனர்.

வில்வித்தை :

தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்து விடவும் உட்பட பல திரைப்படங்களை இயக்கிய ஹரி உத்ரா வில்வித்தை படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் அருண் அறிமுக நாயகராக நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஆராத்யாவும் நடித்துள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இன்ஃபினிட்டி :

இயக்குனர் சாய் கார்த்தி இயக்கத்தில் திரைப்படமாக உருவாகி இருக்கும் இன்பினிட்டி இரண்டு பாகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது.

Movie List

ராயர் பரம்பரை :

ராம்நாத் இயக்கத்தில் வெளியாகியுள்ள ராயர் பரம்பரை திரைப்படத்தில் கிருஷ்ணா, சரண்யா, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், மறைந்த நடிகர் மனோபாலா, கஸ்தூரி உட்பட பலரும் நடித்துள்ளனர்.

காட்டுப்புறா கலைக்குழு :

ராஜா குருசாமி இயக்கத்தில் நடிகர்கள் முனீஸ் காந்த், காளி வெங்கட் உட்பட பலர் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் காட்டுப்புறா கலைக்குழு.