#HBD பிரியங்கா கோத்தாரி.. காதலால் ரசிகர்களை கட்டிப்போட்ட ஜெ ஜெ பட நாயகிக்கு இன்று குவா., குவா நாள்..! 

#HBD பிரியங்கா கோத்தாரி.. காதலால் ரசிகர்களை கட்டிப்போட்ட ஜெ ஜெ பட நாயகிக்கு இன்று குவா., குவா நாள்..! 


Today Actress Priyanka Kothari Nisha Birthday She Acts Tamil Jay Jay Movie

நிஷா கோத்தாரி @ அமோகா @ பிரியங்கா கோத்தாரி பிரபல இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் பாலிவுட், தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் அதிகளவு நடித்துள்ளார். நடிகர் ராம் கோபால் வர்மாவின் திரைப்படங்களில் அதிகளவு நடித்திருப்பார். 

மேற்கு வங்கம் மாநிலத்தில் பிறந்த பிரியங்கா கோத்தாரி, டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். 6 வருடங்கள் திரைத்துறை பயிற்சி வகுப்புக்கு சென்ற பிரியங்கா, 2 வருடங்கள் இபாத் ரெஹ்மான் என்பவருடன் 2 வருட ரிலேஷன்ஷிப்பில் இருந்து பின்னாளில் பிரிந்தார். 

Priyanka Kothari

பின்னர், கடந்த 2016 ஆம் வருடம் டெல்லியை சார்ந்த தொழிலதிபரான பாஸ்கர் பிரகாஷ் என்பவரையும் திருமணம் செய்துகொண்டு, தற்போது அவருடன் வாழ்ந்து வருகிறார். திரைப்பட வாழ்க்கையில் பொறுத்த வரையில், அவருக்கு முதலில் வாய்ப்பளித்தது தமிழ் திரையுலகம். 

Priyanka Kothari

கடந்த 2003 ஆம் வருடம் வெளியான ஜெ ஜெ படத்தில், ஜமுனா என்ற நாயகியாக நடித்தவர் தான் பிரியங்கா கோத்தாரி. அவரின் காதலும், படத்தில் உள்ள பாடலும் இன்றளவும் நினைவில் இருந்து நீங்காத வண்ணம் இருந்து வருகிறது. 

Priyanka Kothari

100 ரூபாய் தாளில் விளையாட்டுத்தனமாக பெயரெழுதி, பின்னாளில் நாயகனை தேடி அவள் அலையும் ஒவ்வொரு நொடியும் ரசிகர்கள் மனதில் காதலை சேர்க்க ஆர்வம் வந்து, ஒவ்வொரு பாடலும் மனதை கரைய வைக்கும் வகையில் இருந்தது. 

இதனைத்தவிர்த்து, தமிழில் கச்சேரி ஆரம்பம், கார்த்திகை போன்ற சொற்ப அளவிலான படத்தில் நடித்துள்ள பிரியங்கா கோத்தாரி, ஹிந்தி படங்களில் அதிகளவு நடித்துள்ளார். இதனைப்போல, சில கன்னட, தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். 2016 ஆம் வருடம் வரை பல்வேறு படங்களில் நடித்த பிரியங்கா கோத்தாரி, அதன் பின்னர் திரையுலகுக்கு முடுக்குபோட்டு அமைதிகாத்து வருகிறார். இன்று அவருக்கு பிறந்தநாள்.