லியோ படத்தின் சிறப்பு காட்சி குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! குஷியில் ரசிகர்கள்...

லியோ படத்தின் சிறப்பு காட்சி குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! குஷியில் ரசிகர்கள்...


tn-government-announced-about-leo-special-shows-timings

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி நடித்துள்ள திரைப்படம் தான் லியோ. இந்த படத்தில் விஜயுடன் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், அர்ஜுன் தாஸ், பிரியா ஆனந்த், ஜாபர், மிஸ்கின், மன்சூர் அலிகான், மனோபாலா, கெளதம் வாசுதேவ் மேனன், ஜியார்ஜ் மரியான், சாண்டி மாஸ்டர், அபிராமி வெங்கடாசலம், கதிர், வையாபுரி உட்பட பலர் நடித்துள்ளனர்.

லியோ திரைப்படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் வருகின்ற அக்டோபர் 19 ஆம் தேதி அனைத்து திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் சிறப்பு காட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது காலை 9 மணிக்கு துவங்கி நள்ளிரவு 1.30 மணிக்கு முடிக்க வேண்டும் என்று தமிழ் நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் சிறப்புக் காட்சி திரையிடுவதில் விதிமீறல் எதுவும் நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது.