திமிரு பட வில்லி நடிகை தனது மகளை பற்றி என்ன கூறியுள்ளார் என்று பாருங்கள்! குவியும் லட்சக்கணக்கான லைக்குகள்!

Timiru sreya reddy


Timiru sreya reddy

இயக்குனர் தருண் கோபியின் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு நடிகர் விஷால், ரீமா சென் ஆகியோரின் நடிப்பில் வெளியான திமிரு படத்தில் கம்பீரமான பெண்ணாக வில்லி வேடத்தில் மிரட்டியவர் தான் ஸ்ரேயா ரெட்டி. அப்படத்தில் இவரின் நடிப்பை பார்த்து பலரும் வியந்துள்ளனர்.

அதனை தொடர்ந்து வெயில், பள்ளிக்கூடம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2008ல் நடிகர் விஷாலின் சகோதரரான நடிகரும், தயாரிப்பாளரும் ஆன விக்ரம் கிருஷ்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டிலானார்.திருமணத்திற்கு பின் அவர் படங்களில் ஏதும் நடிக்கவில்லை.

sreya

தற்போது தனது மகளுடன் நார்வே நாட்டின் ஓஸ்லோ நகருக்கு சென்ற ஸ்ரேயா ரெட்டி அங்கு தனது மகளுக்கு பனிச்சறுக்கு விளையாட்டு கற்றுக் கொடுத்துள்ளார். அவர் குழந்தை விளையாடியதை பார்த்து ஸ்ரேயா,என்னை விட என் மகள் ஈசியாக கற்றுக்கொண்டாள். அவள் தான் சூப்பர் ஸ்டார் என கூறியுள்ளார்.