சினிமா

இன்று முதல் விஜய் தொலைக்காட்சியில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்! என்ன தெரியுமா?

Summary:

விஜய் தொலைக்காட்சியில் பாவம் கணேசன் என்ற புதிய தொடர் துவங்கியுள்ள நிலையில் சில தொடர்களில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பொதுவாகவே தற்காலத்தில்  இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சீரியல்களுக்கு அடிமையாக உள்ளனர். அதிலும் விஜய் டிவிக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.விஜய் டிவியில் வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல்கள், திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் ரியாலிட்டி ஷோக்கள் என ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும் தற்போது இரவு 9.30 மணியளவில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வருகிறது.அதனை ஏராளமான ரசிகர்கள் நாள் தவறாமல் பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று முதல் விஜய் தொலைக்காட்சியில் 6.30 மணியளவில் பாவம் கணேசன் என்ற புதிய தொடர் ஆரம்பமாகியுள்ளது .

Bigg Boss Tamil 4: List of contestants who may enter the show |  Entertainment News,The Indian Express

அதனால் விஜய் தொலைக்காட்சியின் சில சீரியல்களில் நேரங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதாவது  6.30 மணியளவில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி 2 தொடர் 9.30 மணிக்கு நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் தொடர் 10 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

 


Advertisement