சினிமா

இன்று வெளியான நடிகை சித்ராவின் கால்ஸ் திரைப்படம்! பெண்களுக்காக படக்குழு வெளியிட்ட சிறப்பு அறிவிப்பு!!

Summary:

பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து, பின்னர் படிப்படியாக தனது திறமையால் உயர்ந்

பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து, பின்னர் படிப்படியாக தனது திறமையால் உயர்ந்து ஏராளமான சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தவர் விஜே சித்ரா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து இவருக்கென  ஏராளமான ரசிகர்களும் உருவாகினர்.

இந்த நிலையில் சித்ரா கடந்த டிசம்பர் மாதம் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது ரசிகர்கள் அனைவருக்கும் பெரும் துயரத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. சித்ரா மரணத்திற்கு முன்பு முதலும், கடைசியுமாக நடித்த திரைப்படம் கால்ஸ். ஜெய் சபரிஷ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் ஆர் சுந்தர்ராஜன், வினோதினி, தேவதர்ஷினி, நிழல்கள் ரவி, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் கால்ஸ் திரைப்படம் பிப்ரவரி 26 இன்று  திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பெண்களை மையமாக வைத்து, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் எடுக்கப்பட்ட கால்ஸ் படத்திற்கு படக்குழுவினர் இலவச டிக்கெட்டுகளை அறிவித்துள்ளனர். அதாவது சென்னையில் உள்ள திரையரங்குகளில் இப்படத்தை காண வரும் பெண்களுக்கு இலவச அனுமதி என அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Advertisement