மிரட்டலான லுக்கில் வெளிவந்தது துணிவு படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்.! ரசிகர்கள் கொண்டாட்டம்!!

மிரட்டலான லுக்கில் வெளிவந்தது துணிவு படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்.! ரசிகர்கள் கொண்டாட்டம்!!


thunivu-movie-second-look-poster-viral

நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் 3வது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது 61வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் மஞ்சு வாரியர் நடிக்கிறார்.

மேலும் சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் பிரபலமடைந்த ஜான் கொக்கென், வீரா, யோகிபாபு, மகாநதி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இது வங்கிகொள்ளை சம்மந்தப்பட்ட படம் என கூறப்படுகிறது.

இதன் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில் நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியிடப்பட்டது.  படத்திற்கு துணிவு என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது துணிவு படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.