தத்தளிக்கும் சென்னை மக்களை மீட்க அயராது உழைக்கும் துணிவு பட நடிகர்.‌. ரியல் ஹீரோ நீங்கதான்: குவியும் பாராட்டுக்கள்..! 

தத்தளிக்கும் சென்னை மக்களை மீட்க அயராது உழைக்கும் துணிவு பட நடிகர்.‌. ரியல் ஹீரோ நீங்கதான்: குவியும் பாராட்டுக்கள்..! 


thunivu-movie-actor-veera-bahu-help-chennai-peoples

 

வங்ககடலில் நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம், மிக்ஜாங் புயலாக வலுப்பெற்று ஆந்திராவில் கரையை கடந்தது. மழை பொழியும் மேகங்கள் சென்னையை சூழ்ந்த காரணத்தால், 49 ஆண்டுகள் இல்லாத அளவு மழைப்பொழிவை சென்னை சந்தித்தது.  

தற்போதைய நிலவரப்படி சென்னையில் உள்ள வேளச்சேரி, பள்ளிக்கரணை பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மீட்புப்பணிகளில் மாநகராட்சி அதிகாரிகளும், தன்னார்வலர்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

cinema news

இந்நிலையில், அஜித்தின் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தில் நடித்திருந்த நடிகர்களில் ஒருவர் வீர பாகு.

இவர் தற்போது சென்னை நகரில் நடைபெற்று வரும் மீட்பு பணிகளில், மீனவர்களுடன் சேர்ந்து பல மக்களை மீட்டு வருகிறார். இந்த தகவலை பிரசாந்த் ரங்கசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். 

எந்த விதமான எதிர்பார்ப்பும் இன்றி, களத்தில் மக்களுக்காக போராடி வரும் அவர் விளம்பரத்தை விரும்பவில்லை. ஆனால், நான் இந்த தகவலை தெரிவிக்கிறேன். மக்கள் அவரை கட்டாயம் நினைவுகூற வேண்டும் என பிரசாந்த் கூறியுள்ளார்.