நெருப்பு கூத்தடிக்குது பாடல் நடிகையை சிகரெட் பிடிக்க சொல்லி கட்டாயப்படுத்திய செல்வராகவன்..

நெருப்பு கூத்தடிக்குது பாடல் நடிகையை சிகரெட் பிடிக்க சொல்லி கட்டாயப்படுத்திய செல்வராகவன்..



Thulluvadho movie actress interview about selvaragavan

2002 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா தயாரிப்பில் தனுஷ் நடித்து வெளியான திரைப்படம் 'துள்ளுவதோ இளமை0' அறிமுக நடிகரான தனுஷ் 'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது.

Selvaragavan

இந்தப் படத்தில் 'நெருப்பு கூத்தடிக்குது' எனும் பாடல் நடித்த லேகா ஸ்ரீ நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்பாடலில் நடந்த சம்பவங்களைக் குறித்து மனம் திறந்து பேட்டியில் பேசியிருக்கிறார்.

"செல்வராகவன் பாடலில் நடனமாட வேண்டும் என்று கேட்டவுடன் ஓகே என்று சொல்லிவிட்டேன். ஆனால் படப்பிடிப்பின் போது சிகரெட் பிடிக்க வேண்டும் என்று செல்வராகவன் கூறினார். எனக்கு சிகரெட் புகை என்றாலே ஆகாது. சிகரெட் பிடிக்கும் காட்சி மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருந்தேன்" என்று கூறியிருக்கிறார்.

Selvaragavan

மேலும், சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மெண்டுகள் குறித்து பேசிய லேகா ஸ்ரீ "ஒரு திரைப்படம் படப்பிடிப்பின் போது பெங்களூருக்கு சென்றிருந்தேன். அங்கு மூன்று நாட்கள் சூட்டிங் என்று கூறியிருந்தார்கள். ஆனால் மூன்று நாட்களாகியும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. அவர்கள் என்ன எதிர்ப்பார்கள் என்று தெரிந்து நானும் என் அம்மாவும் அங்கிருந்து கிளம்பி விட்டோம்" என்று பரபரப்பை கிளப்பும் விதமாக அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.