சினிமா

எங்களுக்கு முதல் சில்வர் ஜுப்ளி படமே விஜய்யின் இந்த படம்தான்! நடிகர் ஜீவா பேட்டி!

Summary:

thullatha manamum thullum is the first block buster movie of super good films

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தமிழ் மட்டும் இல்லாது, தெலுங்கு, மலையாளம் என இந்தியா முழுவதும் இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.

தற்போது இயக்குனர் அட்லீயுடன் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள விஜய் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் இந்த வெற்றி ஒரே நாளிலோ அல்லது ஒரே படத்திலோ வந்தது இல்லை. பல்வேறு வெற்றிப்படங்கள், தோல்விப்படங்கள் என அனைத்தையும் தாண்டி இன்று தளபதியாக வீற்றிருக்கிறார் விஜய்.

இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படங்களில் ஓன்று துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம். துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 20 ஆண்டுகள் ஆகிறது. 29 ஜனவரி 1999 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை #20YearsOfBlockBusterTMT என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி சமூகவலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் இதை டிரண்டாக்கி வருகின்றனர்.

துள்ளாத மனமும் துள்ளும் படத்தை பிரபல தமிழ் நடிகர் ஜீவாவின் தந்தை RB சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இந்நிலையில் நடிகர் ஜீவா ஒரு நிகழ்ச்சி ஒன்றில் எங்களுக்கு பர்ஸ்ட் சில்வர் ஜுப்ளி வாங்கிக் கொடுத்த படம் துள்ளாத மனமும் துள்ளும் படம் தான் என்று கூறியுள்ளார், அந்த வீடியோ இப்போது டிரண்டாகி வருகிறது. 


Advertisement