சினிமா

அக்கா, தங்கையாக நடிக்கும் இரண்டு பிரபல கதாநாயகிகள்! ஒருத்தர் த்ரிஷா, இன்னொருத்தர்?

Summary:

Thrisha and simran acting as sisters in new movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் த்ரிஷா. விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார் த்ரிஷா. ரஜினியுடன் சேர்ந்து நடிக்கவேண்டும் என்பது த்ரிஷாவின் நீண்ட நாள் கனவு. அந்த கனவும் பேட்ட படம் மூலம் நிறைவேறியது. தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார் த்ரிஷா.

அதேபோல தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் முன்னணி நாடியாக இருந்தவர் சிம்ரன். பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம்வந்தார் சிம்ரன். விஜயகாந்த், அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களுடன் நடித்துள்ளார் சிம்ரன்.

https://cdn.tamilspark.com/media/16880ayr-trisha_simran.jpg

த்ரிஷா, சிம்ரன் இருவரும் பேட்ட படத்தில் ரஜினியுடன் நடித்திருந்தனர். ஆனால், இவர்கள் இருவரும் சந்திப்பது போன்றோ, அல்லது இருவரும் ஒன்றாக சேர்ந்து தோன்றுவது போன்றோ படத்தில் எந்த காட்சிகளும் இடம் பெற்றிருக்காது.

இந்நிலையில் சிம்ரனும், த்ரிஷாவும் அடுத்ததாக சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கும் சாகசம் நிறைந்த ஆக்‌ஷன் திரைப்படத்தில் சகோதரிகளாக நடிக்க இருக்கின்றனர். இதனை ‘கொரில்லா’ திரைப்படத்தை தயாரித்த ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே இப்படம் ஒரு புதிய முயற்சியாக இருக்கும் இப்படத்திற்காக சிம்ரனும், த்ரிஷாவும் கப்பற்படை சார்ந்த பயிற்சிகளை மேற்கொள்ளவிருப்பதாகவும், இதன் ஷூட்டிங் பணிகள் வரும் மார்ச் மாதம் முதல் தொடங்கவுள்ளதாகவும் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


Advertisement