விரைவில் திரையரங்குகள் திறக்கப்படுகிறதா.! வெளியான புதிய தகவலால் மகிழ்ச்சியில் சினிமா ரசிகர்கள்..!

விரைவில் திரையரங்குகள் திறக்கப்படுகிறதா.! வெளியான புதிய தகவலால் மகிழ்ச்சியில் சினிமா ரசிகர்கள்..!


thiyadars-are-open-in-august-month-onwards

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து தியேட்டர்கள் மற்றும் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மற்ற தொழில்கள் ஓரளவிற்கு மீண்டு வந்த நிலையிலும் தியேட்டர்கள், படப்பிடிப்புகளுக்கு தொடங்குவதற்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சினிமா கலைஞர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் பலர் வேலையின்றி வறுமையில் வாடி வருகின்றனர். இதனால் திரையரங்குகளை மீண்டும் திறக்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி சில பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வரும் ஆகஸ்ட் மாதம் முதல் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Thiyadars

மேலும் அப்படி திரையரங்குகள் திறக்கப்பட்டால் சிறியவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு அனுமதி கிடையாது என்றும், ஒரு இருக்கைக்கும் மற்றொரு இருக்கைக்கும் இடையே இடைவெளி விட்டும், சானிட்டைசர் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி திரையரங்குகள் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சினிமா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.