BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் லிஸ்ட் இதோ...விஜயின் லியோ திரைப்படம் வெளியாகிறதா... குஷியில் ரசிகர்கள்!!
திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கிறதோ அதே அளவிற்கு ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஓடிடியில் படம் பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
அந்த வகையில் இந்த வாரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பையும், வசூல் சாதனையும் படைத்த லியோ திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும், 'தி வில்லேஜ்' திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. மேலும் ஆஹா ஓடிடியில் 'டெமன்' திரைப்படமும், சோனி லைவ் ஓடிடியில் 'சத்திய சோதனை' ஆகிய தமிழ் திரைப்படங்கள் இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்கவுள்ளது.